> என் ராஜபாட்டை : நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

.....

.

Thursday, May 24, 2012

நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!

தவமிருந்துதான் பெற்றோம்

உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை
பிச்சை கேட்டு
பல நாட்கள் உன்னிடம்
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்
என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய
என் கன்னத்து தழும்பை
இன்னமும் முத்தமிடுகிறாள்
உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை
மறைத்து,மடித்து கட்டி
வேட்டி வாங்கும்
பணத்தில் வாங்கியதுதான்
உன் வெள்ளி பாலாடை...!
என் அன்பு மகனே..!

முதல் முறை
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான்
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது
கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது
என் அன்பு மகனே...!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும்
கிடந்தது
"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்
உதைக்க காத்திருந்த
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்
கொடுத்த பால்
விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய
உன் எச்சில்
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்
கொலைகாரன் அல்ல...
உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை
என் உடல் தாங்கும்...
என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்
உன் தாய்
தாங்கமாட்டாள்...!
பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!
வாரம் ஒருமுறை
என் பேரப்பிள்ளைகளை
கூட்டி வா..,
இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று
அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து
உன் பிள்ளைகள்
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே..!!!
அனாதையாக எங்களை
விட்டுவிடாமல்,
முதியோர் இல்லத்தில்...
சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!


- இளையபாரதி



டிஸ்கி     1    :முக புத்தக நண்பர் இளையபாரதி எழுதிய கவிதை 

டிஸ்கி 2 : காதல் கவிதைகளை பகிரும் தோழர்களே இதையும் பகிருங்கள்..!!!


இதையும் படிக்கலாமே  :


யார் தெய்வம் ?

துப்பாக்கி Vs பில்லா 2

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

 

 

27 comments:

  1. ராஜா என் மனதில் ராஜபாட்டை உங்கள்கு தான் .

    ReplyDelete
  2. காலையில் ஒரு கலக்கல். கண்களில் ஈரம்

    ReplyDelete
  3. ராஜா என் மனதில் ராஜபாட்டை உங்கள்கு தான் .
    காலையில் ஒரு கலக்கல் கண்களில் ஈரம்
    இது கவிதை அல்ல உண்மை

    ReplyDelete
  4. நெஞ்சை சுட்ட கவிதைதான்....!

    ReplyDelete
  5. உண்மையிலேயே பெற்றோரைப் பேணாதவர்களை சுடும் இக்கவிதை....

    ReplyDelete
  6. உயிரை கொல்பவன் மட்டும்
    கொலைகாரன் அல்ல...
    உணர்வை கொல்பவனும்தான்..,

    ReplyDelete
  7. நெஞ்சை
    உண்மையிலேயே சுடுதுங்க

    ReplyDelete
  8. பெற்றோரை மறந்த பிள்ளைகளை பளிச்சென சாட்டையால் அடிக்கும் கவிதை. மனதைத் தொட்டது நண்பரே... பகிர்ந்த உங்களுக்கு என் நன்றி!

    ReplyDelete
  9. அடேங்கப்பா எத்தனை திரட்டி?

    ReplyDelete
  10. நீண்ட இடைவெளியின் பின்னர் நண்பனின் வலைத்தளம் வருக்றேன். எங்கேயோ சென்றுவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.... கவிதை பலே..!

    ReplyDelete
  11. //முக புத்தக நண்பர் இளையபாரதி எழுதிய கவிதை //

    அருமை நண்பர் இளையபாரதி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வெளியிட்டுள்ள உங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  12. பெரும் சிரத்தை எடுக்காமல் புனையப்பட்ட எளிமையான அழுத்தமான வரிகள்...

    ReplyDelete
  13. சுட்டாலும் நல்லதைத்தான் சுட்டிருக்கிறீர்கள் தலைவா ..!

    அருமையான கவிதை .. :)

    ReplyDelete
  14. வளரும் போதே பெற்றோரை கவனிப்பது நம் தலையாய கடன் என்று சொல்லி வளர்த்தால் இந்த நிலை வராது. எப்படி வளர்ப்பது என்பது தான் புரிவதில்லை

    ReplyDelete
  15. கவிதை எழுதிய அந்த நண்பருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி நெஞ்சை சுடும் கவிதைதான்

    ReplyDelete
  16. சூப்பர் அண்ணா.. மனதார வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் கவிதை பகிர்ந்த மற்ற அண்ணாவிற்கும்..

    ReplyDelete
  17. நெஞ்சைச் சுடும் யதார்த்தம்.நன்று;நன்றி

    ReplyDelete
  18. யதார்த்தம்....

    ReplyDelete
  19. நல்ல கவிதை,முதுமை இந்த நாட்டில் படுகிற பாடு சொல்லி மாளாதது.

    ReplyDelete
  20. இன்றைய நிசர்சனம்.கவிதை மனதை நெகிழவைக்கிறது !

    ReplyDelete
  21. //பேர பிள்ளைகள்
    உதைக்க காத்திருந்த
    மார்பில்,
    நீ உதைத்ததெப்படி..?
    என் செல்ல மகனே..!//


    நல்ல கவிதை வரிகள்..

    ReplyDelete
  22. இளமை முற்றி முதுமை தழுவியபின்
    ஊன்று கோலின்றி தவிக்கும் முதியவர்களின்
    உணர்வுகளை சித்தரிக்கும் உணர்சிக்க் கவி..
    சுட்டெரிக்கும் கவிதை..

    ReplyDelete
  23. வலைச்சரம் வாங்க நண்பா

    ReplyDelete
    Replies
    1. http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_25.html

      Delete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...