> என் ராஜபாட்டை : நேரம் : விமர்சனம்

.....

.

Saturday, May 18, 2013

நேரம் : விமர்சனம்





ரெட் ஜெயன்ட் வெளியிடு என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பை கிளப்பியாதால் இந்த படம் பார்க்க போனேன் . தியட்டரில் 6 மணிக்கு படம் ஆனால் 6.15 க்குதான் போனேன் . உள்ளே என்னை சேர்த்து மொத்தம் 6 பேர் தான் . நமக்கு நேரம் சரியில்லை என நினைத்து படம் பார்க்க துவங்கினேன் .

கதை

ஒரே நாளில் நடக்கும் கதை . ஹீரோ நவீன் வில்லன் வட்டி ராஜா விடம் வாங்கிய கடன் , தங்கை கணவனுக்கு தரவேண்டிய வரதடசனை இவை இரண்டையும்  மாலை 5 மணிக்குள் தரவேண்டும் இத்துடன் தன் காதலி தனக்காக வீட்டை விட்டு வந்துவிட அவளை அவள் தோழி வீட்டில் இருக்க சொல்லி 5  மணிக்கு அழைத்து செல்கிறேன் என சொல்கிறான் . வேறு ஒருவன் தர வேண்டிய பணத்துக்காக தவறுதலாக ஹீரோயினை கடத்தி 5  மணிக்குள் வட்டி ராஜா பணம் கேட்க இவை அனைத்தும் எப்படி முடிகிறது என்பதுதான் கதை .


+ பாயிண்ட்

  • ஹீரோ , ஹீரோயின் என அதிக புது முகங்கள் . (இதுவே பாயிண்ட் )

  • தேவையில்லாத பாடல்கள் இல்லாதது .

  • பஞ்ச் டயலாக் , குத்து பாட்டு , இரட்டை வசனம் ஏதும் இல்லாதது .

  • 1 மணி 57 நிமிடத்தில் படத்தை முடித்தது .

  • இறுதியில் வரும் நாசர் பேசும் வசனங்கள் .

  • படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஒரே சம்பவத்தில் தொடர்புடையதாக காட்டும் யுக்தி .
  • காதல் காட்சிகளை வள வள என இழுக்காமல் முடித்தது .

  • கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் .


- பாயிண்ட் :

  • சரியான விளம்பரம் இல்லாததால் இப்படி ஒரு படம் வருவதே தெரியவில்லை .

  • நாசர் வில்லனா , காமெடியனா என தெளிவில்லாமல் உள்ள குழப்பம் .

  • ஹீரோ ஆரம்பத்தில் வேலை போய்விட்டது என்கிறார் , ஆனால் அடுத்து போகும் நேர்முக தேர்வில் முன் அனுபவம் இல்லை என்கிறார் எப்படி ?

  • ஒரு I T  கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு 50,000 ரூபாய் ஒரு பெரிய தொகையா ?

  • ஒளிப்பதிவு ஆரம்பத்தில் சில இடங்களில் டல்லாக உள்ளது .( தியட்டர் சரியில்லையோ ??)

  • பின்னணி இசை சில காட்சிகளில் வசனத்தை மறைக்கிறது .



முடிவா !!!!!

படம் துவக்கம் மிக மெதுவாக போகிறது ஆனால் இடை வேலைக்கு பின் வேகமாக உள்ளது .
நேரம் (தியட்டரில்) இருந்தால் பார்க்கலாம் .


ஆனந்த விகடன் மார்க் : 36

குமுதம் : பரவாயில்லை

ராஜபாட்டை மதிப்பீடு : 2.5 / 5


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...