> என் ராஜபாட்டை : பென்சில் : சினிமா விமர்சனம்

.....

.

Sunday, May 15, 2016

பென்சில் : சினிமா விமர்சனம்




         

 

இதையும் படித்து விடுங்கள் :

AIRTEL இலவச இன்டர்நெட் (ONLY ANDROID USERS)


அறிமுக இயக்குனர் மனிநாகராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ,ஸ்ரீ திவ்யா, விடிவி கணேஷ் சுஜாதா நாயுடு, ஊர்வசி மற்றும் பலர் நடித்த படம் இது. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து தற்பொழுது வெளிவந்துள்ளது.


கதை :
         பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே நிகழும் பிரச்சனைகள், செயல்பாடுகள் பற்றிய கதை. இடையே திகிலுடன் ஒரு கொலையையும் இணைத்து உள்ளார்கள். நல்ல புள்ள பிரகாஷ், எல்லா கேட்ட பழக்கமும் உள்ள “சூப்பர் ஸ்டார்” மகன் நித்தின். பெண்கள் குளிக்கும் அறையில் கேமிரா வைப்பது, பெண்களை மயக்குவது என ஜாலியா இருக்கான்.

      படத்துவக்கத்திலேயே நித்தின் யாரோ ஒருவரால் பென்சிலால் குத்தி கொல்லபடுகிறார். அவரை போன்றது யார்? தனது தீசிஸ் பேப்பரை எரித்ததால் பிரகாஷ் கொன்றாரா? தனது காதலனுடன் இருந்ததை படம்பிடித்து மிரட்டியதால் ஆசிரியர் கொன்றாரா? தன்னை பிளாக்மெயில் செய்ததால் சக மாணவி கொன்றாரா? பள்ளியில் வேலை செய்யும் ஊழியருடன் பிரச்சனை செய்ததால் அவர் கொன்றாரா? பள்ளியில் வளர்சியை தடுக்க நினைக்கும் எதிர் அணி பள்ளி நிர்வாகம் செய்ததா? அடிதடி பிரச்சனையால் குப்பத்து ஆள் செய்தாரா? என பல டுவிஸ்ட் வைத்துள்ளனர். விடை யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

+ பாயிண்ட்ஸ் :

  • திரைகதை. படம் ஆரம்பித்த உடனே கதைக்குள் செல்கிறது. ஒவ்வொரு பிரச்சனையும் ஏன் நடத்தது என அழகான பிளாஸ்பேக் மூலம் விளக்கியுள்ளார்.
  • ஜி.வி.பிரகாஷ் கொஞ்சம் நடிக்கிறார். 

  • ஸ்ரீ திவ்யா ஸ்கூல் பொண்ணு என்பதை ஜீரணிக்க கஷ்டமாதான் இருக்கு. ஆனாலும் அருமை.

  • வில்லன் நடிகர், பார்வையாலேயே கெட்டபெயர் வாங்குகிறார். நல்ல நடிப்பு.
  • வசனம் மிக அருமை. அதுவும் இறுதி காட்சியில் வரும் வசனம் ஒவ்வொன்றும் சாட்டையடி. இன்றைய கல்விமுறை , ஊடகங்கள் நிலை பற்றி அருமையா விளாசியுள்ளனர்.
  • யார் கொலையாளி என்பதை கடைசிவரை மெயின்டைன் செய்தது.
  • இவர் கொலை செய்திருப்பாரோ என எல்லார் மேலும் சந்தோகம் வரவைத்த யுக்தி அருமை.
  • பின்னணி இசை அருமை.


-    பாயிண்ட்ஸ்:

  •  இவ்வளவு கேவலமாக நடக்கும் ஒரு மாணவனை பள்ளி எப்படி இவ்வளவு நாள் வைத்துகொள்கிறது . பள்ளிக்குள் / வகுப்பில் செல் வைத்திருப்பதை பிரின்சிபால் சகஜமாக எடுத்துகொள்வது எப்படி ?
  • ISO சான்றிதழ் வழங்க ஆய்வுக்கு வரும் போது இவ்வளவும் நடக்குது ஆனா ஒரு சத்தம் கூட இல்லை எப்படி ?
  • பாடல்கள் ரொம்ப சுமார்.
  • எதிரி பள்ளியில் பிரச்சனை செய்ய வேறு பள்ளி ஓனரே நேரில் வருவது நடக்கும் காரியமா?
  • மாணவர்களின் சேட்டையை இன்னும் அதிகமாக்கி கலகலப்பாக கொண்டு சென்றிக்கலாம்.


மொத்தத்தில் :

ஒரு நல்ல கிரைம் திரிலரை அனுபவிக்க நினைபவர்கள் போகலாம். ஆனால் முடிவை யாரிடமும் கேட்காமல் போகணும்.


4 comments:


  1. உங்கள் பட விமர்சன கருத்துகளில் சில இடங்களில் முரண்பாடு உள்ளது. நான் ,சில சிரிப்பு கதைகளை @ மனம் என்ற புதிய இதழயிலில் படித்தேன் நீங்களும் அந்த தமிழ் இணைய இதழில் மேலும் சில சுவையான செய்திகளை படிக்க
    https://play.google.com/store/apps/details?id=manam.ajax.com.manam

    ReplyDelete
  2. BHIM app supports all the Android versions and also PC versions. check How to download BHIM App for Windows/ PC here.
    bhim app for windows

    ReplyDelete
  3. OG youtube App for Download YouTube Videos from android phone.
    https://www.ogyoutube.me/

    ReplyDelete
  4. WiFiKill APK download for Android provides the Android users a great support to secure their internet connections.
    wifikill apk

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...